புதுச்சேரி
முருங்கப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடந்த காட்சி.
- அமாவாசையில் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக் கடனை செலுத்துவது வழக்கம்.
- ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து வந்தனர்.
புதுச்சேரி:
புதுவை முருங்கப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவிலில் ஆடி அமாவாசையில் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக் கடனை செலுத்துவது வழக்கம்.
20-ம் ஆண்டாக பால்குட ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து வந்தனர். முருங்கப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட பால்குட ஊர்வலம் அங்காளம்மன் கோவிலில் நிறைவடைந்தது. அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை தீபாராதனைகள் நடைபெற்றது.
இதில் முருங்கப்பாக்கம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.