புதுச்சேரி
மாணவிகளுக்கு மெகந்தி வரையும் போட்டி நடைபெற்றது.
மகளிர் தினத்தையொட்டி மெகந்தி போட்டி
- மாணவிகளுக்கு மெகந்தி வரையும் போட்டி சங்கர வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
- சென்டாக் மாணவர் பெற்றோர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் பரிசுகளும் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கினர்.
புதுச்சேரி:
அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் சார்பில் சர்வதேச மகளிர் தினவிழாவை முன்னிட்டு கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளுக்கு மெகந்தி வரையும் போட்டி சங்கர வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாநில தலைவர் டாக்டர் இளங்கோவன் தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் உதயச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
மாலதி செல்வம் போட்டியின் நடுவராக இருந்து வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பா.ஜனதா கூட்டுறவு பிரிவு அமைப்பாளர் வெற்றிச்செல்வம், புதுவை சென்டாக் மாணவர் பெற்றோர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் பரிசுகளும் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கினர்.