புதுச்சேரி

செல்வகணபதி எம்.பி. தலைமையில் உப்பு உற்பத்தியாளர் சங்கத்தினர் மத்திய மந்திரியுடன் சந்தித்த போது எடுத்தபடம்.

மத்திய மந்திரியுடன் சந்திப்பு

Published On 2023-02-09 10:25 IST   |   Update On 2023-02-09 10:25:00 IST
  • உரிமங்களை புதுபிப்பதற்கான வழக்கமான நடை முறைகளும் கைவிடப்பட்டது.
  • செல்வ கணபதி எம்.பி.யிடம் முறையிட்டிருந்தனர்.

புதுச்சேரி:

புதுவை மற்றும் தமிழ்நாடு பகுதிகளில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான உப்பளங்களின் ஒதுக்கீட்டு உரிமத்தையும், வாடகையையும் கடந்த 2013-ம் ஆண்டு மத்திய தொழில் மற்றும் வணிகத்துறை 1000 சதவீதம் உயர்த்தி விட்டது. உரிமங்களை புதுபிப்பதற்கான வழக்கமான நடை முறைகளும் கைவிடப்பட்டது. திடீர் வாடகை, உரிமைத் தொகை உயர்வு காரணமாக உப்பு உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உப்பு உற்பத்தியாளர் சங்கத்தினர் செல்வ கணபதி எம்.பி.யிடம் முறையிட்டிருந்தனர்.

இந்நிலையில் உப்பு உற்பத்தியாளர் சங்க பிரதிநிதிகளுடன் செல்வகணபதி எம்.பி. டெல்லி சென்று, மத்திய மந்திரி பியுஷ்கோயலை சந்தித்து, இந்த பிரச்சினையின் முழு பாதிப்புகளையும் விளக்கி, நல்ல தீர்வு காணுமாறு கூறினார்.

இதுகுறித்து உயரதிகாரிகளுடன் விவாதித்து, சுமூகமான தீர்வு காண்பதாக மத்திய மந்திரி உறுதி அளித்தார். இதன்மூலம் 10 ஆண்டுகளாக நீடிக்கும் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என சங்கத்தினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

Tags:    

Similar News