புதுச்சேரி

மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை மந்திரி ராஜூவ் சந்திர சேகரை புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் சந்தித்து சால்வை அணிவித்தனர்.

மருந்து தட்டுப்பாடை போக்க வேண்டும் மத்திய மந்திரியிடம் வலியுறுத்தல்

Published On 2022-06-07 15:01 IST   |   Update On 2022-06-07 15:01:00 IST
  • புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
  • மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி ராஜீவ் சந்திரசேகரை சந்தித்தபோது, புதுவை பல்கலைக்கழகத்துக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும்.

புதுச்சேரி:

புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.

அவர்கள் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி ராஜீவ் சந்திரசேகரை சந்தித்தபோது, புதுவை பல்கலைக்கழகத்துக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும். புதுவை மாணவர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மத்திய மந்திரி எல்.முருகனை சந்தித்து, புதுவை வளர்ச்சி திட்டங்களுக்கு உதவும்படி வலியுறுத்தினர். சுகாதாரத்துறை மந்திரி மன்சுக்மாண்ட்வியாவை சந்தித்து, புதுவை சுகாதார திட்டங்கள் குறித்து பேசினர். ஜிப்மர் இயக்குனரை இடமாற்றம் செய்ய வேண்டும். ஜிப்மரில் தட்டுப்பாடின்றி மருந்து கிடைக்க வழி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இந்த சந்திப்பின் போது பா.ஜனதா மாநில பொருளாதார பிரிவு அமைப்பாளர் ரமேஷ், ஆடலரசன், வக்கீல் கார்த்திக், திரைப்பட இயக்குனர் ராஜசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News