என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Medicine shortages"

    • பாகிஸ்தான் தனது மருந்து மூலப்பொருட்களில் 30 முதல் 40 சதவீதம் வரை இந்தியாவை நம்பியுள்ளது.
    • இந்தியாவுடன் வர்த்தகத்தை நிறுத்தியதால் மருந்து பற்றாக்குறையில் சிக்கும் அபாயத்தில் பாகிஸ்தான் உள்ளது.

    காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்த இந்தியா எடுத்த முடிவுக்கு பதிலடியாக இந்தியாவுடனான அனைத்து வர்த்தகத்தையும் பாகிஸ்தான் நிறுத்தி வைத்தது. பாகிஸ்தான் தனது மருந்து மூலப்பொருட்களில் 30 முதல் 40 சதவீதம் வரை இந்தியாவை நம்பியுள்ளது. தற்போது இந்தியாவுடன் வர்த்தகத்தை நிறுத்தியதால் மருந்து பற்றாக்குறையில் சிக்கும் அபாயத்தில் பாகிஸ்தான் உள்ளது.

    இதையடுத்து மருந்து விநியோகத்தைப் பாதுகாக்க பாகிஸ்தான் 'அவசர' நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் அவசரகால தயார்நிலை நடவடிக்கைகளை பாகிஸ்தான் சுகாதார அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

    இதுகுறித்து பாகிஸ்தான் மருந்து ஒழுங்குமுறை ஆணையம் கூறும்போது, எங்கள் மருந்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான மாற்று வழிகளை நாங்கள் இப்போது தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளது.

    • புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
    • மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி ராஜீவ் சந்திரசேகரை சந்தித்தபோது, புதுவை பல்கலைக்கழகத்துக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.

    அவர்கள் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி ராஜீவ் சந்திரசேகரை சந்தித்தபோது, புதுவை பல்கலைக்கழகத்துக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும். புதுவை மாணவர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    மத்திய மந்திரி எல்.முருகனை சந்தித்து, புதுவை வளர்ச்சி திட்டங்களுக்கு உதவும்படி வலியுறுத்தினர். சுகாதாரத்துறை மந்திரி மன்சுக்மாண்ட்வியாவை சந்தித்து, புதுவை சுகாதார திட்டங்கள் குறித்து பேசினர். ஜிப்மர் இயக்குனரை இடமாற்றம் செய்ய வேண்டும். ஜிப்மரில் தட்டுப்பாடின்றி மருந்து கிடைக்க வழி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இந்த சந்திப்பின் போது பா.ஜனதா மாநில பொருளாதார பிரிவு அமைப்பாளர் ரமேஷ், ஆடலரசன், வக்கீல் கார்த்திக், திரைப்பட இயக்குனர் ராஜசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.

    ×