புதுச்சேரி
அ.ம.மு.க. மாநில இணை செயலாளர் லாவண்யா சாமி தரிசனம் செய்த காட்சி.
உழவர்கரை எல்லை மாரியம்மன் கோவில் திருவிழா
- அ.ம.மு.க. மாநில இணை செயலாளர் லாவண்யா சாமி தரிசனம்
- அ.ம.மு.க. மாநில இணைச் செயலாளர் லாவண்யா கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
புதுச்சேரி:
உழவர்கரை பகுதியில் அமைந்துள்ள எல்லை மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 1-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
இதில் தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், தீப ஆராதனை, இரவு மின் அலங்காரத்துடன் சுவாமி வீதி உலா நடைபெற்றது.
விழாவில் புதுச்சேரி மாநில அ.ம.மு.க. மாநில இணைச் செயலாளர் லாவண்யா கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
அவருக்கு கோவில் சார்பில் முதல்-மரியாதை செய்யப்பட்டது.
தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை எல்லை மாரியம்மன் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் உழவர் கரைப்பேட் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.