புதுச்சேரி

காளிகாம்பாள் கோவில் மண்டல அபிஷேக விழாவில் அமைச்சர் நமச்சிவாயம் சாமி தரிசனம் செய்த காட்சி.

மணவெளி காளிகாம்பாள் கோவிலில் மண்டல அபிஷேகம்-அமைச்சர் நமச்சிவாயம் சாமி தரிசனம்

Update: 2023-03-30 09:02 GMT
  • கங்கையம்மன் கோவில் கும்பாபிஷேம் விமர்சையாக நடந்து முடிந்தது. கும்பாபிஷேகத்தை ஒட்டி 48 நாள் மண்டல அபிஷேகம் நடந்தது.
  • புனர்பூச நட்சத்திரத்தில் காலை 8 மணிக்கு2-ம் கால யாக பூஜையுடன் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

புதுச்சேரி:

வில்லியனூர் அடுத்த வி.மணவெளியில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் காளிகாம்பாள், அகோர வீரபத்திர சாமி, பால்முத்து மாரியம்மன், அறிவொளி விநாயகர், கங்கையம்மன் கோவில் கும்பாபிஷேம் விமர்சையாக நடந்து முடிந்தது.

கும்பாபிஷேகத்தை ஒட்டி 48 நாள் மண்டல அபிஷேகம் நடந்தது. மண்டல அபிஷேகத்தை ஒட்டி அணுங்ஜை விக்னேஸ்வர பூஜை உடன் தொடங்கியது இதில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் அவரது குடும்பத்தினர் பங்கேற்றனர்.

தொடர்ந்து 108 சங்காபிஷேகமும், சிறப்பு ஹோமம், மஹாபூர்ணாஹதி, மஹா தீபாரதனை நடந்தது. புனர்பூச நட்சத்திரத்தில் காலை 8 மணிக்கு2-ம் கால யாக பூஜையுடன் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் அவரது குடும்பத்தினர் பங்கேற்றனர்.

தொடர்ந்து மகாபூர்ணகதி 108 சங்காபிஷேகம் மகா தீபாரதனை விமர்சையாக நடந்தது. மண்டல அபிஷேக நிகழ்ச்சியில் கோவில் திருப்பணி கமிட்டி குழு நிர்வாகி ராமதாஸ் கோயில் தனி அதிகாரி உமாபதி, மண்ணாடிப்பட்டு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அருள்முருகன், மண்ணாடிப்பட்டு தொகுதி முக்கிய பிரமுகர்கள் மற்றும் பா.ஜனதா பிரமுகர் முத்தழகன், அருள்,

வில்லியனூர் தொகுதி பா.ஜனதா பிரமுகர்கள் ஏகாம்பரம், கண்ணபிரான், தேவராஜ், விஸ்வநாதன், ராமதாஸ்,சாம்ராஜ், காமராஜ் ரெட்டியார்பாளை யம் சரவணன், பா.ஜனதா மாநில ஓ.பி.சி. அணி செயலா ளர் சீனிவாச பெருமாள், கோவில் நிர்வாகிகள் வில்லியனூர் மணவெளி பகுதி பொதுமக்கள் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News