விழிப்புணர்வு பேரணியை கிருமாம்பாக்கம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி.
எழுத்தறிவு தின விழிப்புணர்வு பேரணி
- கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் சர்வதேச எழுத்தறிவு தினம் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் டீன் மற்றும் இயக்குனர் பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் வழிகாட்டலின் படி கொண்டாடப்பட்டது.
- இப்பேரணி கிருமாம்பாக்கம் வளைவில் தொடங்கி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வழியாக அரசு கிளை நூலகத்தில் முடிவடைந்தது.
புதுச்சேரி:
கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் சர்வதேச எழுத்தறிவு தினம்
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் டீன் மற்றும் இயக்குனர் பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் வழிகாட்டலின் படி கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.
நிகழ்ச்சிக்கு இயக்குனர் ஆண்ட்ரூ ஜான் தலைமை தாங்கினார். ஆறுபடை வீடு மருத்துவக்கல்லூரி இணை பதிவாளர் பெருமாள் வாழ்த்தினார். பேரணியை கிருமாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணி கிருமாம்பாக்கம் வளைவில் தொடங்கி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வழியாக அரசு கிளை நூலகத்தில் முடிவடைந்தது.
பின்னர் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி மாணவ சங்க அமைப்பின் மூலம் புத்தகங்கள் அரசு கிளை நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்த பேரணியில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள், துணைப் பேராசிரியர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி சந்துரு, ஒருங்கிணைப்பாளர் வளர்மதி, விழா குழுவினர் தமிழ்ச்செல்வன், மோகனப்பிரியா மற்றும் மாணவர் சங்க அமைப்பினர் செய்திருந்தனர்.