புதுச்சேரி

கூடோ தற்காப்பு கலை சங்க பொதுக்குழு கூட்டம்  நடந்த போது எடுத்த படம்.

கூடோ தற்காப்பு கலை சங்க பொதுக்குழு கூட்டம்

Published On 2023-09-23 13:46 IST   |   Update On 2023-09-23 13:46:00 IST
  • கூடோ தற்காப்பு கலை சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது.
  • மாநில தலைவர் வளவன் தலைமை தாங்கினார்

புதுச்சேரி:

கூடோ தற்காப்பு கலை சங்கத்தின் மாநில பொதுக் குழு கூட்டம் நடந்தது.

புதுச்சேரி சங்க தலைமை அலுவலகத் தில் நடந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் வளவன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் சந்தோஷ்குமார், துணைத் தலைவர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தனர்.

பொருளாளர் செந்தில் வேல் வரவேற்றார். கூட்டத்தில் வருகிற நவம்பர் 22-ம் தேதி, குஜராத் மாநிலத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான கூடோ போட்டிக்கு புதுச்சேரி வீரர் களை தேர்வு செய்வது. மத்திய அரசின் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அங்கீகரிக்கப்பட்ட கூடோ விளையாட்டில் மத்திய அரசின் விளையாட்டு சட்ட திட்டங்களை முழுமையாக பின்பற்று வது உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் செல்வம், அசோக், பாலச்சந்தர், வெங்கடாஜலபதி, ரமேஷ், சுரேஷ், சுப்ரமணியன், வெங்கடேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பாலச்சந்தர் நன்றி கூறினார்.

Tags:    

Similar News