புதுச்சேரி

கோப்பு படம்.

போலீஸ் நிலையத்தில் நடக்கும் கட்டபஞ்சாயத்துகளை தடுக்க வேண்டும்

Published On 2023-09-29 11:26 IST   |   Update On 2023-09-29 11:26:00 IST
  • மார்க்சிஸ்டு கம்யூ. கண்டனம்
  • இதுபோன்ற சம்பவங்கள் பலமுறை வெளிப்பட்டபோதும் சில காவல்துறையினர் திருந்துவதாக இல்லை.

புதுச்சேரி:

புதுவை மாநில மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

காலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் கலைச்செல்வி என்ற பெண் தற்கொலை செய்ததற்கு காலாப்பட்டு காவல் துறையினர்தான் முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும் எனவே இந்த தற்கொலைக்கு காரணமான காவல் துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் பலமுறை வெளிப்பட்டபோதும் சில காவல்துறையினர் திருந்துவதாக இல்லை. இதனால் போலீஸ் நிலையம் செல்லவே மக்கள் அஞ்சுகின்றனர்.

கவால்துறையில் நடைபெற்றுவரும் தொடர் கட்டபஞ்சாயத்துகளால் புதுவை மக்கள் தொடர் துன்பங்களையும் பொருள், உயிர் இழப்புகளை அனுபவித்து வருகின்றனர்.

இதுகுறித்து பலமுறை பல்வேறு வழிகாட்டுதல்கள் நீதிமன்ற உத்தரவுகள் வந்தபோதும் புதுவை காவல்துறையில் உள்ள சிலர் மாறுவதாக இல்லை. எனவே புதுவை அரசு இப்பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News