புதுச்சேரி

கோப்பு படம்.

புதுவையில் கம்பன் விழா

Published On 2023-05-11 14:41 IST   |   Update On 2023-05-11 14:41:00 IST
  • கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைக்கிறார்
  • மாணவர்களுக்கு அமைச்சர்கள் சந்திர பிரியங்கா, சாய்.ஜெ.சரவணன்குமார் ஆகியோர் பரிசு வழங்குகின்றனர்.

புதுச்சேரி:

புதுவை கம்பன் கழகம் சார்பில் 56-ம் ஆண்டு கம்பன் விழா தொடங்கி 14-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.

 புதுவை கம்பன் கலையரங்கில் 12-ம் தேதி காலை 9.15 மணிக்கு தொடக்கவிழா நடக்கிறது. சென்னை ஐகோர்ட் நீதிபதி மகாதேவன் தலைமையில் கம்பன் சிலைக்கு மாலை அணிவிக்கப்படுகிறது. முதல்-அமைச்சர் ரங்கசாமி வரவேற்புரை ஆற்றுகிறார்.

கவர்னர் தமிழிசை கம்பன் விழாவை தொடங்கி வைக்கிறார். சபாநாயகர் ஏம்பலம் செல்வம் விழா மலர், புதுவை மாநில தமிழ் புலவர்களுக்கான பரிசுகளை வழங்குகிறார். கவிச்சக்கரவர்த்தியின் பணிவு என்ற பாரதி கிருஷ்ணகுமார் எழுதிய நூலை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட, புதுக்கோட்டை கம்பன் கழக செயலாளர் சம்பத்குமார் பெற்றுக் கொள்கிறார்.

 முருகேசன் பானுமதி அறக்கட்டளையின் கம்பக்காவலர் பரிசை இலங்கை விஷ்ணுதானுக்கு அமைச்சர் லட்சுமி நாராயணன் வழங்குகிறார். அருணகிரி அறக்கட்ட ளையின் கம்பன் ஆய்வு நூல் பரிசை அலெக்சு தேவராசு சேன்மார்க்கிற்கு அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் வழங்குகிறார்.

கம்பன் கழக போட்டிக ளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர்கள் சந்திர பிரியங்கா, சாய்.ஜெ.சரவணன்குமார் ஆகியோர் பரிசு வழங்குகின்றனர்.

கம்பன் கழக அறக்கட்டளை பரிசுகளை எம்.பி. வைத்தி லிங்கம் வழங்கு கிறார். எம்.எல்.ஏ. அனிபால்கென்னடி, சென்னை கம்பன் கழக நல்லி குப்புசாமி செட்டியார் ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர். மேலும் 14-ந் தேதி வரை இந்நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறுகிறது.

முன்னதாக விழாவிற்கு வருபவர்களை கம்பன் கழக செயலாளரும் முன்னள் சபாநாயகருமான சிவக் கொழுந்து, செல்வகணபதி எம்.பி. மற்றும் நிர்வாகிகள் வரவேற்கின்றனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், தமிழ் அறிஞர்கள், கம்பன் கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொள்கின்றனர். 

Tags:    

Similar News