புதுச்சேரி

இந்திய கம்யூனிஸ்டு நடைபயணம் நடைபெற்ற காட்சி.

இந்திய கம்யூனிஸ்டு நடைபயணம்

Update: 2023-02-04 07:46 GMT
  • இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கதிர்காமம் தொகுதி குழு சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சார நடைபயணம் தொடங்கியது.
  • தொகுதி முழுவதும் 15 ஆண்டுகளுக்கு மேலாக போடப்படாத குண்டும். குழியுமான சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

புதுச்சேரி:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கதிர்காமம் தொகுதி குழு சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சார நடைபயணம் தொடங்கியது.

இந்திரா காந்தி சிலை அருகே பிரச்சார நடை பயணத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச்செயலாளர் சேதுசெல்வம் தொடங்கி வைத்தார். தொகுதி செயலாளர் மூர்த்தி தலைமை வகித்தார். பயணத்தில் நிர்வாகிகள் பாலகங்காதரன், சண்முகம், மகாலிங்கம், கண்ணன், செங்குட்டுவன், ராகினி, குமரேசன், புளோரியா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தொகுதி முழுவதும் 15 ஆண்டுகளுக்கு மேலாக போடப்படாத குண்டும். குழியுமான சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும். பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். மின்துறை தனியார் மயத்தை கைவிட வேண்டும். புதைவட கேபிள் அமைக்க வேண்டும். குடிநீரில் கழிவு நீர் கலப்பதை தடுத்து சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும். என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த நடைபயணம் நடத்தப்பட்டது.

Tags:    

Similar News