புதுச்சேரி

கோப்பு படம்.

null

உத்தரவை மீறினால் நலத்திட்ட உதவிகள் ரத்து

Published On 2023-04-18 06:26 GMT   |   Update On 2023-04-18 08:29 GMT
  • எந்திரம் பொருத்திய பைபர் படகில் மீன்பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது.
  • ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

புதுச்சேரி:

புதுவை மீன்வளத்துறை இயக்குனர் பாலாஜி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடலில் மீன்வளத்தை பாதுகாத்திட புதுவையில் கவர்னர் உத்தரவின்படி மீன்பிடி தடைக்காலம் கடந்த 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி கனகசெட்டிகுளம் முதல் புதுக்குப்பம் வரையிலான பாரம்பரிய மீன்பிடி படகுகளான கட்டுமரம், நாட்டு படகுகளை தவிர அனைத்து வகை படகுகள் குறிப்பாக இழுவலைகள், இழுமடி வலைகள் கொண்டு விசைப்படகு மற்றும் எந்திரம் பொருத்திய பைபர் படகில் மீன்பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது.

எனவே மீனவர்கள் மீன்பிடி தடைக்கால உத்தரவை முறையாக கடைபிடிக்க வேண்டும். தடைகாலத்தில் எந்திரம் பொருத்தப்பட்ட பைபர் படகில் இழுவலைகள், இழுமடி வலைகளை பயன்படுத்துவதாக கண்டறியப்பட்டால் அவர்கள் மீது புதுவை கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் சம்பந்தப்பட்ட மீனவர்களுக்கு மீன்வளத் துறையின் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் எதுவும் வழங்கப்படாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News