புதுச்சேரி
ஓமியோபதி டாக்டர்கள் சங்க விழிப்புணர்வு கூட்டம் நடந்த காட்சி.
null
ஓமியோபதி டாக்டர்கள் சங்க விழிப்புணர்வு கூட்டம்
- இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் ஓமியோபதி மருத்துவர்கள் சங்கம் சார்பில் விழிப்புணர்வு கூட்டம் காமராஜ் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது.
- இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் ஓமியோபதி மருத்துவர்கள் சங்க தலைவர் டாக்டர் பிரகாஷ் ராவ் தலைமை தாங்கினார்.
புதுச்சேரி:
இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் ஓமியோபதி மருத்துவர்கள் சங்கம் சார்பில் விழிப்புணர்வு கூட்டம் காமராஜ் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது.
இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் ஓமியோபதி மருத்துவர்கள் சங்க தலைவர் டாக்டர் பிரகாஷ் ராவ் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் டாக்டர் பாலாஜி முன்னிலை வைத்தார், சிறப்பு விருந்தினராக தேசிய ஓமியோபதி ஆணையத்தின் தலைவர் டாக்டர் திரிவேதி, புதுவை மாநிலத்தில் மாநில ஹோமியோபதி மருத்துவ கவுன்சில் தொடங்குவதால் ஏற்படும் நன்மைகளையும், வருங்கால வளர்ச்சி குறித்தும் விவரித்தார்.
தேசிய ஹோமியோபதி ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர் செந்தில்ஜெகதீசன் வாழ்த்தி பேசினார். விழிப்புணர் நிகழ்ச்சியில் புதுவை மாநில ஓமியோபதி பயிற்சி பெற்ற மருத்துவர்கள் பலர் கலந்துகொண்டனர்.