புதுச்சேரி

கோப்பு படம்.

null

ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தை சூறையாடிய வாலிபர்

Published On 2022-08-24 14:40 IST   |   Update On 2022-08-24 14:56:00 IST
  • வேலையில் இருந்து நீக்கியதால் ஆத்திரம் அடைந்து ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தை சூறையாடிய வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  • டெல்லியை தலைமையிட மாக கொண்ட ஆன்லைன் வர்த்தக கிளை நிறுவனம் புதுவை லாஸ்பேட்டை மெயின் ரோட்டில் தனியார் காம்பளக்சில் இயங்கி வருகிறது.

புதுச்சேரி:

வேலையில் இருந்து நீக்கியதால் ஆத்திரம் அடைந்து ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தை சூறையாடிய வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

டெல்லியை தலைமையிட மாக கொண்ட ஆன்லைன் வர்த்தக கிளை நிறுவனம் புதுவை லாஸ்பேட்டை மெயின் ரோட்டில் தனியார் காம்பளக்சில் இயங்கி வருகிறது.

இந்த நிறுவனத்தில் பிள்ளைச்சாவடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முரளி என்பவர் பொருட்களை டெலிவரி செய்யும் வேலை செய்து வந்தார்.

கடந்த சில நாட்களாக முரளி சரியாக வேலைக்கு வராததால் அவரை அந்த நிறுவனம் வேலையில் இருந்து நீக்கியதாக கூறப்படுகிறது. இதனால் முரளி ஆத்திரத்தில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று முரளி தான் வேலை பார்த்து வந்த நிறுவனத்துக்கு சென்று அங்கிருந்த பொருட்களையும் வாகனங்களையும் அடித்து உடைத்து சூறையாடியதாக தெரிகிறது.

மேலும் இதனை தட்டிக்கேட்ட மற்ற ஊழியர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் பொறுப்பாளர் பராஸ்துஷிர் லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News