புதுச்சேரி

பட்டமளிப்பு விழாவில் மாணவருக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்டம் வழங்கிய போது எடுத்தபடம்.

391 மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்

Published On 2022-08-07 03:30 GMT   |   Update On 2022-08-07 03:30 GMT
  • புதுவை மணக்குள விநாயகர் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையின் 7-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது.
  • கல்லூரி இயக்குனர் டாக்டர் ராஜகோவிந்தன் வரவேற்று பேசினார்.

புதுச்சேரி:

புதுவை மணக்குள விநாயகர் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையின் 7-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. கல்லூரி இயக்குனர் டாக்டர் ராஜகோவிந்தன் வரவேற்று பேசினார்.

விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். அப்போது இளநிலை மருத்துவ மாணவ-மாணவிகள் 300 பேரும், முதுநிலை மருத்துவ மாணவ-மாணவிகள் 91 பேரும் பட்டங்களை பெற்றனர். மேலும் சிறப்பாக படித்த மாணவ-மாணவிகளுக்கு தங்கப்பதக்கங்களையும் அவர் வழங்கினார்.

விழாவில் அவர் பேசும் போது மணக்குள விநாயகர் கல்வி குழுமத்தின் கல்வி நிறுவனங்களில் அரசு ஒதுக்கீட்டில் சேர மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த கல்லூரியில் படித்த மாணவர்கள் இப்போது பல்வேறு பெரிய நிறுவனங்களில் நல்ல நிலையில் உள்ளனர். இந்த கல்வி குழுமத்தினர் தங்களது மேன்மையான செயல்திறனை நிரூபித்துள்ளனர் என்றார்.

கல்லூரி இயக்குனர் டாக்டர் ராஜகோவிந்தன் தனது வரவேற்புரையில், புதுவை பல்கலைக்கழக அளவில் பதக்கங்களை பெறுவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதற்கு கல்லூரி ஆசிரியர்களின் கற்பித்தல் முறையும், நல்ல நிர்வாகமும் தான் காரணம். நாட்டிற்கு நல்ல மருத்துவர்களை இக்கல்லூரி உருவாக்கி வருகிறது. அ த ற் கு ஏற்றவாறு கட்டமைப்பு வசதி, புற மற்றும் உள் நோயாளிகள் இருப்பது காரணமாகும் என்று குறிப்பிட்டார்.

பட்டமளிப்பு விழாவில் மணக்குள விநாயகர் கல்வி நிறுவன தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன், துணைத்தலைவர் சுகுமாரன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், துணை இயக்குனர் மற்றும் டீன் காக்னே ராஜேந்திரகுமார், அகாடமிக் டீன் கார்த்திகே யன், டீன் (ஆய்வு) கலைச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பிரகாஷ் நன்றி கூறினார்.

Tags:    

Similar News