புதுச்சேரி

கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் ராபின்சன் பேசிய போது எடுத்த படம்.

ரசாயனம் இல்லாத விநாயகர் சிலைகளை வைக்க வேண்டும்-போலீசார் அறிவுறுத்தல்

Published On 2022-08-20 12:26 IST   |   Update On 2022-08-20 12:26:00 IST
  • விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலை வைப்பவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து கோட்டகுப்பம் போலீஸ் நிலையத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
  • கூட்டத்திற்கு இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமை தாங்கினார். இதில், மத்திய மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய வழிமுறைகளின்படி ரசாயனம் இல்லாத விநாயகர் சிலைகளை வைக்க வேண்டும்.

புதுச்சேரி:

விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலை வைப்பவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து கோட்டகுப்பம் போலீஸ் நிலையத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமை தாங்கினார். இதில், மத்திய மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய வழிமுறைகளின்படி ரசாயனம் இல்லாத விநாயகர் சிலைகளை வைக்க வேண்டும். மேலும் வழிபாட்டு தலங்கள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனை அருகில் விநாயகர் சிலையை வைக்க கூடாது.

10 அடி உயரத்திற்கு மேல் விநாயகர் சிலை வைக்கக்கூடாது. கீற்று கொட்டகை அமைத்த பந்தலில் விநாயகர் சிலையை வைக்கக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கோட்டக்குப்பம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கிராம முக்கியஸ்தர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், கவுன்சிலர்கள் மற்றும் கோட்டக்குப்பம் வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News