இலவச பயிற்சி வகுப்புகளை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்து சான்றிதழ் வழங்கிய காட்சி. அருகில் அமைச்சர் சந்திரபிரியங்கா உள்ளார்.
மேல்நிலை எழுத்தர் தேர்வுக்கு இலவச பயிற்சி
- அரசு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை சார்பில் அரசு துறைகளில் காலியாக உள்ள மேல்நிலை எழுத்தர் பதவிகள் போட்டி தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது.
- சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு பட்டதாரிகளுக்கு பயிற்சி பெறுவதற்கான அனுமதி சீட்டை வழங்கினார்.
புதுச்சேரி:
புதுவை அரசு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை சார்பில் அரசு துறைகளில் காலியாக உள்ள மேல்நிலை எழுத்தர் பதவிகள் போட்டி தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது.
இந்த போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பட்டதாரிகளுக்கு புதுவை அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு வரை நிலை கழகம் சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் மகாத்மா காந்தி வீதியில் உள்ள பெத்திசெமினார் மேல் நிலைப்பள்ளி, மாதா கோவில் வீதியில் உள்ள இமாகுலேட் பள்ளியில் நடக்கிறது.
இதன் தொடக்க விழா நேற்று மாலை பெத்திசெமினார் பள்ளியில் நடந்தது. விழாவுக்கு அமைச்சர் சந்திர பிரியங்கா தலைமை தாங்கினார். சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு பட்டதாரிகளுக்கு பயிற்சி பெறுவதற்கான அனுமதி சீட்டை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை செயலாளர் கேசவன், இயக்குனர் அசோகன், மேம்பாட்டு வரை நிலைக்கழக மேலாண் இயக்குனர் தயாளன், பெத்திசெமினார் பள்ளி முதல்வர் பாஸ்கல்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த இலவச பயிற்சி முகாம் தினமும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற உள்ளது. இதில் 200 பேர் கலந்துகொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.