இலவச மருத்துவ முகாம் நடைபெற்ற காட்சி.
திப்புராயபேட்டையில் இலவச மருத்துவ முகாம்
- ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு, அம்மா அறக்கட்டளை மற்றும் மகாத்மா காந்தி மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் உப்பளம் திப்புராயப்பேட்டை சமுதாய கூடத்தில் நடைபெற்றது.
- தொண்டை, எலும்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது இதில் 500-க்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்தனர்.
புதுச்சேரி:
ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு, அம்மா அறக்கட்டளை மற்றும் மகாத்மா காந்தி மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் உப்பளம் திப்புராயப்பேட்டை சமுதாய கூடத்தில் நடைபெற்றது.
முகாமை அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அம்மா அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் பிரபாகரன் முன்னிலை வகித்தார்.
முகாமில் பொது மற்றும் குழந்தைகள் நல மருத்துவம், கண்,தோல், இதயம், காது, மூக்கு, பல், தொண்டை, எலும்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது இதில் 500-க்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்தனர்.
மேலும் இளைஞர்கள் ரத்த தானம் செய்தனர். மருத்துவ சிகிச்சை பெற்ற அனைவரையும் ஊக்குவிக்கும் வகையில் இலவச சர்க்கரை வழங்கப்பட்டது.
முகாம் தொடக்க நிகழ்ச்சியில் இணைச் செயலாளர்கள் வீரம்மாள், முன்னாள் கவுன்சிலர் கணேசன், ஆர்.வி. திருநாவுக்கரசு, மாநில துணை செயலாளர் நாகமணி, கிருஷ்ணமூர்த்தி, மாநில அ.தி.மு.க. பொருளாளர் ரவி பாண்டுரங்கன், நகர செயலாளர் அன்பழகன் உடையார்,
அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் பாப்புசாமி, மாநில மீனவர் அணி செயலாளர் ஞானவேல், உப்பளம் தொகுதி செயலாளர் துரை, வார்டு செயலாளர் செல்வம்,சக்திவேல், சுந்தரமூர்த்தி, விஜய், பன்னிர்,வேலு, பரமசிவம், சந்திரசேகர்,சசி, மதிவாணன், முருகன், ரமணன் மணிகண்டன் ஆகியோர் பங்கேற்றனர்.