பா.ஜனதா சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்ற காட்சி.
- லாஸ்பேட்டையில் பா.ஜனதா சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
- மருத்துவ முகாமை பா.ஜனதா மாநிலத் தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
புதுவை மாநில பாரதீய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் மோடியின் 8 ஆண்டுகால சாதனைகளை மக்களுக்கு தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதை தொடர்ந்து லாஸ்பேட்டை தொகுதி பா.ஜனதா சார்பில் பெத்துசெட்டிப்பேட்டில் உள்ள சித்தானந்தா உயர்நிலைப்பள்ளியில் இலவச மருத்துவ முகாம் டாக்டர் முரளி கிருஷ்ணன் மேற்பார்வையில் நடைபெற்றது.
மருத்துவ முகாமை பா.ஜனதா மாநிலத் தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
மருத்துவ முகாமில் 200-க்கும் மேற்பட்டவர்கள் நேரடியாக வந்து மருத்துவரிடம் ஆலோசனை பெற்று பயன் பெற்றனர்.
நிகழ்ச்சியில் பா.ஜனதா லாஸ்பேட் தொகுதி பொதுச் செயலாளர் ரமேஷ், மாநில மகளிர் அணி பொதுச் செயலாளர் கனகவல்லி, மாநில செயலாளர் லதா, உழவர்கரை மாவட்ட மகளிர் அணி தலைவி வள்ளி, வல்லுநர் பிரிவு மாநில இணை அமைப்பாளர் ஆசீர்வாத ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மருத்துவ முகாம் ஏற்பாட்டினை பா.ஜனதா மாநில பொருளாதார பிரிவு இணை அமைப்பாளர் நமச்சிவாயம் செய்திருந்தார்.