புதுச்சேரி

அங்காளன் எம். எல்.ஏ. மாணவர்களுக்கு இலவச சைக்கிள்  வழங்கிய காட்சி.

null

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

Published On 2023-05-19 11:02 IST   |   Update On 2023-05-19 11:28:00 IST
  • அங்காளன் எம். எல்.ஏ வழங்கினார்
  • அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு சீருடைகள் மற்றும் தையல் கூலி,

புதுச்சேரி:

புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் மற்றும் பள்ளி சீருடை மற்றும் தையல் கூலி ஆகியவற்றை அனைத்து அரசு பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக திருபுவனை தொகுதிக்குட்பட்ட திருவண்டார் கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2022-2023 பயின்ற 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு சைக்கிள், மதகடிப்பட்டு பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சைக்கிள், 7-ம் வகுப்பு மாணவர்களுக்கு யோகா பாய்கள், 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு துண்டுகள், மதகடிப்பட்டு அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு சீருடைகள் மற்றும் தையல் கூலி, நல்லூர் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளி சீருடை மற்றும் தையல் கூலி, கலிதீர்த்தாள்குப்பம் கலைஞர் கருணாநிதி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு சைக்கிள் மற்றும் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி சீருடைகள் மற்றும் தையல் கூலி, சிலுக்காரிபாளையம் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு சீருடை மற்றும் தையல் கூலி, ஆகியவற்றை அங்காளன் எம்.எல்.ஏ வழங்கினார்.

இந்நிகழ்ச்சியின் போது பள்ளியின் தலைமை ஆசிரியை- ஆசிரியர்கள், பள்ளியின் பொறுப்பாசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News