புதுச்சேரி

 பாரம்பரிய உணவுகளை சமைத்து உற்சாகத்துடன் விற்பனை செய்த மாணவிகள்.

ராஜேஸ்வரி கல்லூரியில் உணவு திருவிழா

Published On 2023-08-01 11:57 IST   |   Update On 2023-08-01 11:57:00 IST
  • கல்லூரியில் பாரம்பரிய உணவு திருவிழா நடந்தது.
  • தொழில் முனைவு திறன்களை அனுபவரீதியாக பெற்றனர்.

புதுச்சேரி:

பொம்மையார் பாளையம் ராஜேஸ்வரி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாரம்பரிய உணவு திருவிழா நடந்தது. மாணவிகள் நாட்டு, சிறுதானிய, பாரம்பரிய மற்றும் மாநில உணவு வகைகளை தயாரித்து நாற்பதுக்கும் மேற்பட்ட குழுக்களாக அமைத்து அவரவர் தயாரித்த உணவுப் பொருட்களை விற்பனை செய்து விற்பனர் மனோபாவத்துடன் தொழில் முனைவு திறன்களை அனுபவரீதியாக பெற்றனர்.

வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு வகையான பழச்சாறு  பானங்களையும் விளையாட்டு நிகழ்வுகளையும் உணவு கண்காட்சியில் மாணவிகள் அரங்கேற்றினர். கல்லூரி மாணவிகளும், பேராசிரியர்களும் கலந்துகொண்டு விற்பன்னர் மாணவிகளை ஊக்குவித்தனர். கல்லூரி செயலாளரின் வழிகாட்டுதலிலும் கல்லூரி முதல்வரின் மேற்பார்வையிலும் சிறப்பாக நடைபெற்ற நிகழ்வில் மாணவிகள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்குப் பின் விற்பன்னராக மாணவிகளின் அனுபவ ங்கள் கேட்டறியப்பட்டு அவர்களுக்கு வழிகாட்டுதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

Tags:    

Similar News