புதுச்சேரி

கோப்பு படம்.

தொழில் தொடங்க அனுமதி பெற தீயணைப்பு துறை இழுத்தடிப்பு

Published On 2023-07-22 05:24 GMT   |   Update On 2023-07-22 05:24 GMT
  • முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்திசேகர் குற்றச்சாட்டு
  • கால தாமதத்தால் பல நிறுவனங்கள் புதுவை மாநிலத்தை விட்டு வெளி யேறும் நிலை உள்ளது.

புதுச்சேரி:

புதுவை முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆபத்தில் இருக்கும் குடிமக்களை மீட்க எப்போதும் தயாராக தீயணைப்பு துறை இருக்க வேண்டும்.

இந்நிலை மாறி மக்களுக்கு பாதிப்புகளை உண்டாக்கும் துறையாக மாறி வருகிறது. கட்டிடங்களுக்கு அனுமதி தரும் பிரிவை சேர்ந்த அதிகாரிகள் சுயநலமாக செயல்படுகின்றனர். தொழில் தொடங்க அனைத்து துறை அனுமதி கொடுத்தாலும் தீயணைப்பு துறை இழுத்தடிக்கிறது.

கால தாமதத்தால் பல நிறுவனங்கள் புதுவை மாநிலத்தை விட்டு வெளி யேறும் நிலை உள்ளது.

பல கட்டிடங்கள் கட்டப்பட்டு அனுமதி வழங்கப்படாததால் திறக்கப்படாமல் உள்ளது. கட்டிட அளவை மீறி உபகரணங்கள், அவர்கள் கூறும் நிறுவனத்தில் மட்டுமே பொருட்களை வாங்க வேண்டும் என வற்புறுத்துகின்றனர்.

கவர்னர், முதல்-அமைச்சர், அமைச்சர் உடனடி நடவடிக்கை எடுத்து தீயணைப்பு துறையில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நட வடிக்கை எடுக்கா விட்டால் தீயணைப்பு துறை முன்பு போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

Tags:    

Similar News