புதுச்சேரி

முதல்-அமைச்சர் ரங்கசாமியை நடிகர் குணாநிதி மற்றும் தயாரிப்பாளர் சபரீஸ் ஆகியோர் சந்தித்த போது எடுத்தபடம். அருகில் அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம், முன்னாள் எம்.பி. தன்ராஜ் உள்ளனர்.

சினிமா தொழிலாளர்களுக்கு புதுவையில் யூனியன் அமைக்க வேண்டும்-முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் வலியுறுத்தல்

Published On 2023-03-04 14:57 IST   |   Update On 2023-03-04 14:57:00 IST
  • மாநில அளவில் திரைத்துறையில் இருக்கும் சினிமா யூனியன்கள் போல புதுவைக்கென்று தனியாக சினிமா யூனியன் அமைக்க வேண்டும்.
  • புதுவை மாநிலத்தில் சினிமா தொழிலாளர்கள் யூனியன் அமைக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார்.

புதுச்சேரி:

புதுவை சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை நடிகர் குணாநிதி மற்றும் தயாரிப்பாளர் சபரிஷ் சந்தித்தனர்.

அப்போது ஒவ்வொரு மாநில அளவில் திரைத்துறையில் இருக்கும் சினிமா யூனியன்கள் போல புதுவைக்கென்று தனியாக சினிமா யூனியன் அமைக்க வேண்டும். இதன் மூலம் புதுவை பகுதியில் படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் புதுவையை சேர்ந்த தொழிலாளர்களுக்கு 40 சதவீத வேலை வாய்ப்பினை பெற முடியும்.

மேலும் புதுவை மட்டுமல்லாது சுற்று வட்டார சினிமா துறை தொழில்நுட்ப கலைஞர்களும் பயனடைவார்கள். எனவே புதுவையில் சினிமா தொழிலாளர்களுக்கு யூனியன் அமைக்க ஆவன செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டனர். அதற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி இது குறித்து ஆலோசனை நடத்தி புதுவை மாநிலத்தில் சினிமா தொழிலாளர்கள் யூனியன் அமைக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் லட்சுமி நாராயணனை சந்தித்து இதே கோரிக்கையை முன்வைத்தனர். சந்திப்பின்போது, அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் மற்றும் முன்னாள் தன்ராஜ் எம்.பி. ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News