கோப்பு படம்.
பொதுசேவை மையங்களில் கட்டண கொள்ளை
- வையாபுரி மணிகண்டன் புகார்
- அரசு நிர்ணயித்த இந்த கட்டணத்தை எந்த பொது சேவை மையமும் வசூலிப்பதில்லை.
புதுச்சேரி:
புதுவைமாநில அ.தி.மு.க. துணை செயலாளர், வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பொது சேவை மையங்க ளில் ஆதார் எண்ணை புதுப்பித்தல், திருத்தம் உள்ளிட்ட அனைத்து பணிக ளுக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என ஒவ்வொரு அரசு துறையும் கட்டணத்தை நிர்ணயித்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அரசு நிர்ணயித்த இந்த கட்டணத்தை எந்த பொது சேவை மையமும் வசூலிப்ப தில்லை.
தங்கள் இஷ்டத்திற்கு பொதுமக்களிடம் வசூல் வேட்டையில் பொதுசேவை மைய நிர்வாகிகள் ஈடுபடுகின்றனர்.
எந்த சேவைக்கும் குறைந்த பட்சமாக ரூ.300 முதல் ரூ.500 வரை வசூலிக் கின்றனர். குறிப்பாக முத்தியால் பேட்டை தொகுதியில் இந்த வசூல் வேட்டை அதிகமாக உள்ளது. இதனால் முத்தி யால் பேட்டை தொகுதி மக்கள் மிகுந்த அவதிக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகின்றனர்.
அரசு துறையில் நிர்ண யிக்கப்பட்ட கட்டணத் தொகை குறித்த பட்டியலை பொதுமக்கள் பார்வைக்கு பொது சேவை மையத்தில் வெளிப்படையாக அறிவிப்பு பலகை வைத்து, அந்த கட்டணத்தை மட்டுமே வசூலிப்பதை மாவட்ட கலெக்டர் கண்காணிக்க வேண்டும்.
பாமர ஏழை மக்களிடம் கொள்ளை யடிக்கும் பொது சேவை மையங்களின் அனுமதியை மாவட்ட கலெக்டர் ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு வையாபுரி மணிகண்டன் கூறியுள்ளார்.