புதுச்சேரி

மாணவர்களுக்கு அமைச்சர் நமச்சிவாயம் நோட்டு புத்தகம் வழங்கும் காட்சி. 

வீடு தோறும் தேசிய கொடியினை ஏற்ற வேண்டும் அமைச்சர் நமச்சிவாயம் வேண்டுகோள்

Published On 2022-08-13 09:33 GMT   |   Update On 2022-08-13 09:33 GMT
  • சுதந்திர தின விழாவில் தொகுதி,எம்.எல்.ஏ.வும். உள்துறை அமைச்சருமான நமச்சிவாயம் திருக்கனூர் கடைவீதியில் தேசிய கொடியினை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
  • மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் மற்றும் இனிப்புகளை அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்.

புதுச்சேரி:

நாட்டின் 75- வது சுதந்திர தினம் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது.

மண்ணாடிப் பட்டு தொகுதியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தொகுதி,எம்.எல்.ஏ.வும். உள்துறை அமைச்சருமான நமச்சிவாயம் திருக்கனூர் கடைவீதியில் தேசிய கொடியினை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

இதனை தொடர்ந்து கொ.மண வெளியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் தேசிய கொடியினை ஏற்றி வைத்து பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் மற்றும் இனிப்புகளை அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்.

அப்போது அமைச்சர் நமச்சிவாயம் பேசியாதவது:-

மண்ணாடிப் பட்டு தொகுதி மக்கள் மட்டுமல்லாது , புதுவை மாநில மக்கள் அனைவரும் வீடு தோறும் தேசியக் கொடியினை ஏற்ற வேண்டும். 75-வது ஆண்டு அமுத திருவிழாவை அனைவரும் கொண்டாட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கொடாத்தூர் பகுதியில் பாரத மாதா சிலைக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாரதமாதா சிலைக்கு மலர் தூவி. தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

Tags:    

Similar News