ஆலேசானை கூட்டத்தில் கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் பேசிய காட்சி.
கிழக்கு மாநில அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் அன்பழகன் தலைமையில் நடந்தது
- புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர மற்றும் தொகுதி செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று உப்பளம் தலைமை அலுவலகத்தில் நடந்தது.
- கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். காரைக்கால் மாவட்ட செயலாளர் ஓமலிங்கம், மாநில அவைத் தலைவர் அன்பானந்தம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதுச்சேரி:
புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர மற்றும் தொகுதி செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று உப்பளம் தலைமை அலுவலகத்தில் நடந்தது.
கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். காரைக்கால் மாவட்ட செயலாளர் ஓமலிங்கம், மாநில அவைத் தலைவர் அன்பானந்தம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், கட்சியின் எதிர்கால நலன் கருதி தற்போதுள்ள கட்சி ஒருங்கிணைப்பாளர்கள் என்ற இரட்டை தலைமையை மாற்றி, கட்சிக்கு ஒரே தலைமையாக கட்சி பொதுச்செயலாளர் பதவியை 23-6-2022 அன்று சென்னையில் நடைபெற உள்ள கட்சி செயற்குழு, பொதுக் குழு கூட்டத்தில் கொண்டு வர வேண்டும் என்றும்தமிழக எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை கட்சியின் பொதுச் செயலாளராக ஏற்றுக் கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் முன்னாள் மாநில செயலாளர் நடராசன், மாநில இணைச் செயலாளர் வீரம்மாள், மாநில துணைச் செயலாளர்கள், வையாபுரி மணிகண்டன், கோவிந்தம்மாள் ,பொருளாளர் ரவிபாண்டுரங்கன், மாநில ஜெ. பேரவை செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பாஸ்கர் மற்றும் முன்னால் எம்.எல்.ஏ.வுமான ராஜாராமன், மாநில இணைச் செயலாளர்கள் கணேசன், திருநாவுக்கரசு, நகரக் செயலாளர்கள் அன்பழக உடையார், சித்தானந்தம், செயற்குழு உறுப்பினர் விஜயலட்சுமி.
மாநில துணை செயலாளர்கள் எம்.ஏ.கே. கருணாநிதி, கிருஷ்ணமூர்த்தி, கணேசன்.,வி.கே. மூர்த்தி, காந்தி, குமுதன், சேரன், மாநில எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பாண்டுரங்கன், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, மாநில எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் மருதமலையப்பன், வக்கீல் பிரிவு செயலாளர் ராமலிங்கம், மீனவரணி செயலாளர் ஞானவேல், மாநில அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் செல்வம், மாணவரணி செயலாளர் பிரதீப், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் தினேஷ்குமார் உட்பட நகர நிர்வாகிகள்,தொகுதி நிர்வாகிகள், வார்டு நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.