புதுச்சேரி

கோப்பு படம்.

மதுகுடித்த தொழிலாளி பரிதாப சாவு

Published On 2023-02-18 10:45 IST   |   Update On 2023-02-18 10:45:00 IST
  • மனைவி இறந்த வேதனையில் அளவுக்கு அதிகமாக மது குடித்த தொழிலாளி பரிதாபமாக இறந்து போனார்.
  • மனஉளைச்சல் ஏற்பட்டு மது பழக்கத்துக்கு ஆளானார். வேலைக்கு எதுவும் செல்லாமல் தினமும் மது குடித்து வந்தார்.

புதுச்சேரி:

மனைவி இறந்த வேதனையில் அளவுக்கு அதிகமாக மது குடித்த தொழிலாளி பரிதாபமாக இறந்து போனார்.

மயிலாடுதுறை மாவட்டம் மூங்கில்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத்(வயது36). இவருக்கு சரண்யா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. 2 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலகுறைவால் சரண்யா இறந்து போனார். மனைவி இறந்து போனது முதல் கோபிநாத் மனவருத்தத்தில் சோகத்துடன் இருந்து வந்தார்.

மேலும் மனஉளைச்சல் ஏற்பட்டு மது பழக்கத்துக்கு ஆளானார். வேலைக்கு எதுவும் செல்லாமல் தினமும் மது குடித்து வந்தார். இதனால் மனைவி இறந்த சோகத்தை மறக்க கோபிநாத் தனது குழந்தைகளை தாயிடம் ஒப்படைத்து விட்டு புதுவை வந்தார்.

புதுவையில் கூலி வேலை செய்து அந்த பணத்தில் மது குடித்து வந்தார். அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்ததால் கோபிநாத்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த 1½ மாதத்துக்கு முன்பு கோபிநாத் சொந்த ஊருக்கு சென்று தாய் மற்றும் குழந்தைகளை பார்த்து விட்டு மீண்டும் புதுவை வந்தார்.

இந்தநிலையில் நேற்று லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் கோபிநாத் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு ஒரு கடை முன்பு தூங்கினார். அப்போது நாக்கு வறண்டு அவர் பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசார் கோபிநாத்தின் தாய் சங்கரிக்கு தகவல் தெரிவித்த னர். சங்கரி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News