புதுச்சேரி

கோப்பு படம்.

முந்திரி ஆயில் சிதறியதில் டிரைவர் மூச்சு திணறி சாவு

Published On 2023-09-08 13:28 IST   |   Update On 2023-09-08 13:28:00 IST
  • கோலியனூரில் உள்ள வாட்டர் சர்வீஸ் நிலையத்துக்கு லாரியை கொண்டு வந்து சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுச்சேரி:

புதுவை திலாஸ்பேட்டை வழுதாவூர் சாலையை சேர்ந்தவர் தினகரன்.வயது 41) டேன்கர் லாரி டிரைவர் இவருக்கு கலைவாணி என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

தினகரன் அடிக்கடி லாரியில் லோடு ஏற்றிச்செல்வது வழக்கம். அதுபோல் சம்பவத்தன்று கேரளாவில் இருந்து லாரியில் முந்திரி ஆயிலை ஏற்றிக்கொண்டு புதுவை துத்திப்பட்டில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலைக்கு கொண்டு வந்தார். அங்கு முந்திரி ஆயிலை இறக்கி விட்டு பின்னர் கோலியனூரில் உள்ள வாட்டர் சர்வீஸ் நிலையத்துக்கு லாரியை கொண்டு வந்து சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது லாரி டேங்கரில் மீதமிருந்து முந்திரி ஆயில் தினகரன் காலில் கொட்டியது. இதனால் தினகரன் காலில் கொட்டிய முந்திரி ஆயிலை சுத்தம் செய்தார். அப்போது அவருக்கு மூச்சுத்தினறல் ஏற்பட்டது. இதனை பொருட்படுத்தாமல் தினகரன் வீட்டுக்கு வந்து தூங்கி விட்டார். மறுநாள் காலையில் பார்த்த போது தினகரன் காலில் பெரிய அளவில் கொப்பளங்கள் இருந்தது. மேலும் தொடர்ந்து அவருக்கு நெஞ்சு எரிச்சலும் இருந்தது.

உடனே தினகரனை அவரது மனைவி மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றார்.

அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தினகரன் சிகிச்சை பலனின்றி  பரிதாபமாக இறந்து போனார்.

இது குறித்து அவரது மனைவி கலைவாணி கொடுத்த புகாரின் பேரில் சேதராப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News