புதுச்சேரி
மோடி அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்க புத்தகத்தை அசோக்பாபு எம்.எல்.ஏ. பொதுமக்களுக்கு வழங்கிய காட்சி.
வீடு வீடாக மோடி சாதனை விளக்க புத்தகம்
- அசோக்பாபு எம்.எல்.ஏ. தலைமையில் வழங்கினர்
- புத்தகம் ஜான்பால் நகரில் அசோக்பாபு எம்.எல்.ஏ. தலைமையில் வழங்கப் பட்டது. மேலும் வீடு தோறும் ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டது.
புதுச்சேரி:
பாரத பிரதமர் மோடியின் 9 ஆண்டு சாதனைகளை விளக்கி புதுவையில் பா.ஜனதா சார்பில் வீடு வீடாக சென்று சாதனை விளக்க புத்தகம் வழங்கப்பட்டு வருகிறது.
அதுபோல் முதலி யார்பேட்டை தொகுதியில் பா.ஜனதா சார்பிலும் வீடு வீடாக மோடி அரசின் சாதனை விளக்க புத்தகம் ஜான்பால் நகரில் அசோக்பாபு எம்.எல்.ஏ. தலைமையில் வழங்கப் பட்டது. மேலும் வீடு தோறும் ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பா.ஜனதா நிர்வாகிகள் கார்த்திகேயன், கணேசன், தில்லை கோவிந்தன், லட்சுமி, அன்பரசி, மஞ்சுளா, ரஞ்சித், பார்த்தீபன், ரத்தின சபாபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.