புதுச்சேரி

மாணவர்களுக்கு முதலாம் ஆண்டு சேர்க்கை ஆணையை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கிய காட்சி. அருகில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், கே.எஸ்.பி.ரமேஷ் எம்.எல்.ஏ. உள்ளனர்.

சுதந்திரமாக இருப்பதாக நினைத்து படிப்பில் கவனத்தை விட்டுவிடக்கூடாது

Published On 2023-10-04 13:55 IST   |   Update On 2023-10-04 13:55:00 IST
  • முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். மாணவர் வகுப்பு தொடக்கவிழா இன்று நடந்தது.
  • விழாவுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை வகித்தார்.

புதுச்சேரி;

புதுவை அரசு இந்திரா காந்தி அரசு மருத்துவக்கல்லூரி கருத்தரங்கு அறையில் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். மாணவர் வகுப்பு தொடக்கவிழா இன்று நடந்தது. விழாவுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை வகித்தார். சபாநாயகர் ஏம்பலம் செல்வம், கே.எஸ்.பி.ரமேஷ் எம்.எல்.ஏ., மருத்துவ கல்லூரி இயக்குனர் டாக்டர் உதயசங்கர், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ராஜேஷ், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் முதலாம் ஆண்டு சேர்க்கை ஆணைகளை வழங்கி பேசியதாவது:-

பள்ளி படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்கு வரும்போது சுதந்திரமாக தோன்றும். அந்த மனப்போக்கு வரும்போதுதான் முதலாம் ஆண்டிலேயே சிலர் படிப்பதை கைவிட்டுவிடு கின்றனர். சுதந்திரமாக இருப்பதில் தவறில்லை, ஆனால் படிப்பதில் கவனத்தை விட்டுவிடக்கூடாது. அரியர்ஸ் இல்லாமல் மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும்.

அப்போதுதான் அரசின் சலுகைகளை பெற முடியும். ஒவ்வொரு மருத்துவரையும் உருவாக்க அரசு செலவு செய்கிறது. இந்த பொறுப்புகளை மாணவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து வருகிறோம். கூடுதல் அறுவை சிகிச்சை கூடங்கள் தேவை என கேட்டுள்ளனர். அதையும் செய்ததர உள்ளோம். உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனை, மருத்துவக்கல்லூரியாக உருவாக்க அரசு தேவையான வசதிகளை செய்து வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Tags:    

Similar News