புதுச்சேரி

ரூ.36 லட்சம் செலவில் மேம்பாட்டு பணி-செந்தில்குமார் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்த காட்சி.

ரூ.36 லட்சம் செலவில் மேம்பாட்டு பணி - செந்தில்குமார் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்

Published On 2022-07-26 10:13 IST   |   Update On 2022-07-26 10:13:00 IST
  • இதில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பூமி பூஜை செய்து வைத்து, பணியை தொடங்கி வைத்தார்.
  • சிமெண்ட் சாலை சீரமைக்க மொத்தம் ரூ.36 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி:

பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் பாகூர் சரஸ்வதி நகரில் தார் சாலை அமைத்தல், குருவிநத்தம் பெரியார் நகரில் சிமெண்ட் சாலை செப்பனிடுதல், இருளஞ்சந்தை பேட் பாலம் அமைத்து சிமெண்ட் சாலை சீரமைக்க மொத்தம் ரூ.36 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது.இதில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பூமி பூஜை செய்து வைத்து, பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன், மேலாளர் ரவி, உதவி பொறியாளர் முத்துசிவம், இளநிலை பொறியாளர் பிரதீப்குமார் தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News