மதகடிப்பட்டு வாரசந்தையில் சார்பில் டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்த போது எடுத்த படம்.
மணக்குள விநாயகர் பாலிடெக்னிக் சார்பில் டெங்கு விழிப்புணர்வு
- மதகடிப்பட்டு கிராமத்தில் டெங்கு விழிப்புணர்வு நிகழச்சி நடத்தப்பட்டது.
- பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சுத்தம் செய்தனர்
புதுச்சேரி:
மணக்குள விநாயகர் பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் மதகடிப்பட்டு பகுதியில் நடைபெற்ற வாரசந்தை மற்றும் மதகடிப்பட்டு கிராமத்தில் டெங்கு விழிப்புணர்வு நிகழச்சி நடத்தப்பட்டது.
டெங்கு காய்ச்சலை தடுக்கவும், டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களை கட்டுப்படுத்துவது குறித்தும் டெங்குவை வருமுன் தடுப்பது மிக எளிது என்ற தலைப்பில் துண்டு பிரசுரம் வீடு வீடாக சென்றும் மற்றும் சந்தையில் கடைகள் வைத்துள்ள வியாபாரிகள் மற்றும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழச்சியில் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு எவ்வாறு மூலிகை புகை போடுவது, கொசு உற்பத்தியை தடுப்பது என்பதை பற்றிய குறிப்புகளை கூறியதோடு டயர், உடைந்த பானைகள், தேங்காய் ஓடுகளில் உள்ள தேங்கிய தண்ணீரை பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சுத்தம் செய்தனர். இதில் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் வேலழகன், என்.எஸ்.எஸ். மாணவர்கள் கலந்து கொண்டனர்.