லாஸ்பேட்டை கொக்கு பார்க் அருகே அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்த போது எடுத்த படம்.
மின்துறை தனியார்மயத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
- புதுவை மக்களுக்கு எதிரான மின்துறை தனியார்மயப்படுத்தும் முடிவினை கைவிட வலியுறுத்தி
- ஆர்ப்பாட்டம் தட்டாஞ்சாவடி அரசு அச்சகம் எதிரே நடந்தது.
புதுச்சேரி:
புதுவை மக்களுக்கு எதிரான மின்துறை தனியார்மயப்படுத்தும் முடிவினை கைவிட வலியுறுத்தியும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் மத்திய- மாநில அரசுகளின் கொள்கை முடிவினை விளக்கியும், தெருமுனை கூட்டம், ஆர்ப்பாட்டம் தட்டாஞ்சாவடி அரசு அச்சகம் எதிரே நடந்தது.
போராட்டத்திற்கு ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொதுச் செயலாளர் சேதுசெல்வம் தலைமை வகித்தார். மாநில தலைவர் தினேஷ் பொன்னையா முன்னிலை வகித்தார்.
சி.ஐ.டி.யூ. பிரதேச செயலாளர் சீனுவாசன், ஐ.என்.டி.யூ.சி. பொதுச் செயலாளர் ஞானசேகரன், அரசு ஊழியர் சம்மேளனம் பொதுச் செயலாளர் ராதா–கிருஷ்ணன், ஏ.ஐ.சி.சி.
டி.யூ. தலைவர் மோதிலால், எல்.எல்.எப்.செயலாளர் செந்தில், எம்.எல்.எப். செய–லாளர் வேதா வேணுகோபால் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.