புதுச்சேரி

நத்த மேடு கிராமத்தில் சமுதாய நலக்கூடம் பகுதியில் குப்பைகளை அகற்ற துணை சபாநாயகர் நடவடிக்கை மேற்கொண்ட காட்சி.

குப்பைகள்-புதர்மண்டிகள் அகற்றம்

Update: 2022-08-18 09:14 GMT
  • நெட்டப்பாக்கம் தொகுதி நத்தமேடு கிராமத்தில் சமுதாய நலக்கூடம் மற்றும் குடிநீர் தேக்க தொட்டியை சுற்றியுள்ள இடங்கள் குப்பைகள் கொட்டப்பட்டும் புதர்கள் மண்டியும் இருந்தது.
  • துணை சபாநாயகர் ராஜவேலு அந்த இடத்திற்கு நேரில் சென்று ஜே.சி.பி. எந்திரங்களை வரவைத்து உடனடியாக அந்த இடத்தை சரிசெய்தார்.

புதுச்சேரி:

நெட்டப்பாக்கம் தொகுதி நத்தமேடு கிராமத்தில் சமுதாய நலக்கூடம் மற்றும் குடிநீர் தேக்க தொட்டியை சுற்றியுள்ள இடங்கள் குப்பைகள் கொட்டப்பட்டும் புதர்கள் மண்டியும் இருந்தது. அதனை சரி செய்து தரவேண்டும் என தொகுதி மக்கள் துணை சபாநாயகர் ராஜவேலுவிடன் கோரிக்கை அளித்து இருந்தனர்.

அதனை ஏற்று உடனடியாக துணை சபாநாயகர் ராஜவேலு அந்த இடத்திற்கு நேரில் சென்று ஜே.சி.பி. எந்திரங்களை வரவைத்து உடனடியாக அந்த இடத்தை சரிசெய்தார்.

அப்போது நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜெயக்குமார் மற்றும் என்.ஆர். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News