புதுச்சேரி

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்ட காட்சி.

தலித் கூட்டமைப்பினர் ஊர்வலம்-ஆர்ப்பாட்டம்

Published On 2023-02-07 14:53 IST   |   Update On 2023-02-07 14:53:00 IST
  • புதுவை மாநில தலித், பழங்குடி இயக்கங்க ளின் கூட்டமைப்பு சார்பில் சிறப்புக்கூறு நிதியை முழுமையாக தாழ்த்தப்பட்டோர் மேம்பாட்டிற்கே செலவிட வேண்டும் என வலியுறுத்தி ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடந்தது.
  • போலீசார் ஆம்பூர் சாலையில் பேரிகார்டு அமைத்து அவர்களை தடுத்தனர். அப்போது போலீ சாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் தள்ளு, முள்ளு ஏற்பட்டது.

புதுச்சேரி:

புதுவை மாநில தலித், பழங்குடி இயக்கங்க ளின் கூட்டமைப்பு சார்பில் சிறப்புக்கூறு நிதியை முழுமையாக தாழ்த்தப்பட்டோர் மேம்பாட்டிற்கே செலவிட வேண்டும் என வலியுறுத்தி ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடந்தது.

அண்ணா சிலை அருகே புறப்பட்ட ஊர்வலத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. நீலகங்காதரன், நிர்வாகிகள் ராமச்சந்திரன், ஏகாம்பரம், பாஸ்கர், ராஜா, பிரசாத் உட்பட பலர் பங்கேற்றனர். ஊர்வலம் அண்ணாசாலை, நேருவீதி, மிஷன் வீதி வழியாக சட்டமன்றம் நோக்கி வந்தது.

போலீசார் ஆம்பூர் சாலையில் பேரிகார்டு அமைத்து அவர்களை தடுத்தனர். அப்போது போலீ சாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிறப்புக்கூறு நிதியை வேறு திட்டங்க ளுக்கு மாற்றக்கூடாது, நிதியை திருப்பித்தர வேண்டும். முழுமையாக ஆதிதிராவிடர்களுக்கு சிறப்புக்கூறு நிதியை செலவிட வேண்டும் என வலியுறுத்தியும், அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பப்பட்டது.

Tags:    

Similar News