புதுச்சேரி

கோப்பு படம்.

மகளிர் மேம்பாட்டுதுறையில் ஒப்பந்த பணி

Published On 2023-10-06 13:56 IST   |   Update On 2023-10-06 13:56:00 IST
  • 26-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
  • பணிக்கான கல்வி தகுதி, வயது வரம்பு நிபந்தனைகள் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி:

புதுவை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையில் மத்திய அரசின் மிஷன் சக்தி சம்பல் மகளிர் ஹெல்ப்லை ன் திட்டத்தின் கீழ் 16 பணியிடங்கள் ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

புதுவையை சேர்ந்த தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கான கல்வி தகுதி, வயது வரம்பு நிபந்தனைகள் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் வருகிற 25-ந் தேதி மாலை 5.30 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என் துறை இயக்குனர் முத்துமீனா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News