புதுச்சேரி
கன்டெய்னர் டெலிவரி செய்வதற்காக புதுவை உப்பளம் துறைமுகத்தில் இருந்து சென்னைக்கு இன்று முதல் பயணத்தை தொடங்கும் கப்பல்.

புதுவையில் இருந்து சென்னைக்கு கண்டெய்னர் கப்பல் போக்குவரத்து இன்று தொடக்கம்

Published On 2023-02-26 05:27 GMT   |   Update On 2023-02-26 05:27 GMT
  • 100 கண்டெய்னர்களை மட்டும் கப்பல் மூலம் புதுவை உப்பளம் துறைமுகத்திற்கு கொண்டு வந்து, இங்கிருந்து டெலிவரி செய்வது குறித்து 2 துறைமுகங்களுக்கிடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.
  • கப்பலின் பல்வேறு தேவைகளுக்காக 6 ஆயிரம் லிட்டர் டீசல் நிரப்பப்பட்டது.

புதுச்சேரி:

சென்னை, எண்ணூர் துறைமுகத்திற்கு, பல்வேறு நாடுகளில் இருந்து கப்பலில் வரும் கண்டெய்னர்களை ஏற்றி, இறக்குவது மற்றும் டெலிவரி செய்வதில், இடப்பற்றாக்குறை காரணமாக காலதாமதம் ஏற்படுகிறது.

இதை சரி செய்யும் விதமாக அங்கிருந்து, 100 கண்டெய்னர்களை மட்டும் கப்பல் மூலம் புதுவை உப்பளம் துறைமுகத்திற்கு கொண்டு வந்து, இங்கிருந்து டெலிவரி செய்வது குறித்து 2 துறைமுகங்களுக்கிடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.

இந்த பணிக்காக குளோபல் லாஜிஸ்டிக்ஸ் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனத்தின், 106 கண்டெய்னர்களை, ஒரே நேரத்தில் ஏற்றிச்செல்லும் சிறிய ரக கப்பல் கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து புதுவைக்கு கடந்த 11-ம் தேதி வந்தது.

கடந்த 15 நாட்களாக உப்பளம் துறைமுக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இந்த கப்பல், சென்னையிலிருந்து கண்டெய்னர்களை ஏற்றி வர, இன்று சென்னைக்கு செல்கிறது.

இந்த கப்பல் வாரத்தில் 2 நாட்கள் சென்னையில் இருந்து கண்டெய்னர்களை கொண்டு வந்து டெலிவரி செய்வது மற்றும் புதுவையில் இருந்து அவற்றை சென்னைக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட உள்ளது.

அதனையொட்டி, கப்பலின் பல்வேறு தேவைகளுக்காக 6 ஆயிரம் லிட்டர் டீசல் நிரப்பப்பட்டது. இன்று முதல் கப்பல் போக்குவரத்து தொடங்குகிறது.

Tags:    

Similar News