புதுச்சேரி

புதுவை காங்கிரஸ் ஓருங்கிணைப்பாளர் தேவதாஸ் பிறந்தநாளையொட்டி மணக்குள விநாயகர் கோவிலில் தங்க தேர் இழுத்து வழிபட்ட காட்சி.

காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் பிறந்த நாள் விழா

Published On 2023-04-26 09:35 GMT   |   Update On 2023-04-26 09:35 GMT
  • நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்
  • மணக்குள விநாயகர் கோவிலில் தங்கத்தேர் இழுத்தனர்.

புதுச்சேரி:

புதுவை மாநில காங்கிரஸ் சீனியர் துணைத்தலைவரும், ஒருங்கிணைப்பாளருமான தேவதாசுக்கு இன்று 65-வது பிறந்தநாளாகும். காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் தனது பிறந்த நாளை தட்டாஞ்சாவடி நவசக்தி நகரில் உள்ள அவரின் இல்லத்தில்  கொண்டாடினார். புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் அளித்த 65 கிலோ கேக்கை வெட்டினார்.

அவர்கள் தேவதாசுக்கு சால்வை, பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து தேவதாஸ் ஏழைகளுக்கு நலத்திட்டங்களை உதவிகளை வழங்கினார். விழாவில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயண சாமி, மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், வைத்திலிங்கம் எம்.பி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர்கள் பெத்தபெருமாள், கமல கண்ணன், முன்னாள் துணை சபாநாயகர் பாலன், காங்கிரஸ் பொதுச்செயலா ளர்கள் திருமுருகன், வேல்முருகன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு, வக்கீல் அணி தலைவர் மருதுபாண்டியன், நிர்வாகிகள் ராஜா, குமார், திருமலை, கோபு, தியாகராஜன், ராஜேந்திரன், கிருஷ்ணராஜூ, யுனிவர்சல் சிவா, செல்வநாதன், மகளிரணி துணைத்தலைவி ஜெயலட்சுமி, காரைக்கால் மாவட்ட தலைவர் சந்திரமோகன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரஞ்சித் உள்பட பலர் பங்கேற்றனர்.

முன்னதாக 8.30 மணியளவில் மணக்குள விநாயகர் கோவிலில் தங்கத்தேர் இழுத்தனர். 9.30 மணிக்கு மிஷன் வீதி மாதாகோவிலில் சிறப்பு வழிபாடு, 10 மணிக்கு முல்லா வீதி மசூதியில் சிறப்பு தொழுகை நடந்தது. மதியம் 12.30 மணியளவில் ராஜீவ்காந்தி குழந்தைகள் நல ஆஸ்பத்திரி அருகே அன்னதானம் வழங்கப்பட்டது. 4.30 மணிக்கு ஒஸ்பிஸ் கான்வென்டில் முதியோர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News