புதுச்சேரி

பளு தூக்கும் போட்டியில் பதக்கம் வென்ற மாணவரை ஆல்பா கல்விக்குழும இயக்குனர் தனதியாகு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.

பதக்கம் வென்ற மாணவருக்கு பாராட்டு

Published On 2023-03-09 14:41 IST   |   Update On 2023-03-09 14:41:00 IST
  • துவை ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர் தருண் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றார்.
  • தனதியாகு பொன்னாடை போர்த்தி கவுரவித்ததுடன் பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்தினார்.

புதுச்சேரி:

மாநில அளவிலான பளுதூக்கும் போட்டி சமீபத்தில் நடந்தது. இதில் சப்-ஜூனியர் பிரிவில் புதுவை ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர் தருண் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றார்.

மேலும் தெலுங்கானா மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியிலும் தங்கப் பதக்கம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தார். சாதனை படைத்த மாணவரை ஆல்பா கல்விக்குழும இயக்குனர் தனதியாகு பொன்னாடை போர்த்தி கவுரவித்ததுடன் பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்தினார்.

நிகழ்ச்சியின்போது மாணவரின் பெற்றோர் மற்றும் பயிற்சியாளர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News