ஆரோவில் சர்வதேச நகரத்தில் நடந்த மெகா தூய்மைப்படுத்தும் பணியினை ஆரோவில் செயலர் ஜெயந்தி ரவி, ஜி.எஸ்.டி கவுன்சில் ஆணையர் பத்மஸ்ரீ ஆகியோர் தொடங்கி வைத்த காட்சி.
- ஆரோவில் சர்வதேச நகரத்தில் மெகா தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.
- புதுச்சேரி சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் கலால் வரி ஆணையரகம் ஆரோவில் பவுண்டேசன் இணைந்து இன்று ஆரோவில் நகரம் முழுவதும் மெகா தூய்மைப்படுத்தும் பணி மற்றும் மரக்கன்று நடும் நிகழ்ச்சியை தொடங்கியது.
புதுச்சேரி:
ஆரோவில் சர்வதேச நகரத்தில் தூய்மை படுத்துதல் மற்றும் மரக்கன்று நடும் நிகழ்ச்சியை ஆரோவில் செயலர் ஜெயந்தி ரவி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் கலால் வரி ஆணையரகம் ஆரோவில் பவுண்டேசன் இணைந்து இன்று ஆரோவில் நகரம் முழுவதும் மெகா தூய்மைப்படுத்தும் பணி மற்றும் மரக்கன்று நடும் நிகழ்ச்சியை தொடங்கியது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஆரோவில் செயலர் ஜெயந்தி ரவி புதுச்சேரி சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் கலால் வரி ஆணையர் பத்மஸ்ரீ ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.
இந்த தூய்மைப்படுத்தும் பணியில் தன்னார்வலர்கள் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள், டாக்டர்கள், மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொண்டனர்.