புதுச்சேரி

காலராவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ரொட்டி, பிஸ்கெட், பழங்களை அன்பழகன் வழங்கிய காட்சி.

காலராவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரொட்டி-அன்பழகன் வழங்கினார்

Published On 2022-07-06 14:54 IST   |   Update On 2022-07-06 14:54:00 IST
  • காலரா நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை
  • காரைக்காலில் காலரா பரவி நிலை மோசமானதற்கு அதிகாரிகளின் மெத்தனப் போக்கே காரணமாகும்.

புதுச்சேரி:

காரைக்கால் மாவட்டத்தில் காலரா நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் தலைமை

யில் அ.தி.மு.க.வினர் சந்தித்து ஆறுதல் கூறி பிஸ்கட், ரொட்டி, பழம் வழங்கினர். பின்னர், அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது:-

காரைக்காலில் காலரா பரவி நிலை மோசமானதற்கு அதிகாரிகளின் மெத்தனப் போக்கே காரணமாகும்.

காரைக்கால் மாவட்ட மக்கள் அதிகாரிகளின் தவறான செயல் பாட்டி னால் விரக்தியின் விளிப்பிற்கு தள்ளப்பட்டு உள்ளனர். முதல்-அமைச்ர் காரைக்கால் மாவட்ட வளர்ச்சி, உட்கட்டமைப்பு, சுகாதாரம் போன்றவற்றில் தனி கவனம் செலுத்தி போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காலராவால் மரணமடைந்த குடும்பத்தினருக்கு நிவாரண உதவியை

முதல்-அமைச்சர் உடனடியாக அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி னார்.

மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஓமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. அசனா, மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், நகர செயலாளர் அன்பழக உடையார், மாவட்ட இணை செயலாளர் ஜீவானந்தம், துணை செயலாளர் குரு மூர்த்தி மற்றும் காரைக்கால் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News