புதுச்சேரி

முதல்-அமைச்சர் ரங்கசாமி கவர்னர் தமிழிசைக்கு சால்வை அணிவித்து மகளிர் தின வாழ்த்து தெரிவித்த காட்சி. அருகில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆகியோர் உள்ளனர்.

கவர்னர் தமிழிசைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி வாழ்த்து

Published On 2023-03-08 14:54 IST   |   Update On 2023-03-08 14:54:00 IST
  • மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் சார்பில் வில்லியனூர் கோபாலசாமி நாயகர் திருமண மண்டபத்தில் சர்வதேச மகளிர் தின விழா நடைபெற்றது.
  • விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், வேளாண் அமைச்சர் தேனீ. ஜெயக்குமார், ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி:

புதுவை அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் சார்பில் வில்லியனூர் கோபாலசாமி நாயகர் திருமண மண்டபத்தில் சர்வதேச மகளிர் தின விழா நடந்தது.

கவர்னர் தமிழிசை குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், வேளாண் அமைச்சர் தேனீ. ஜெயக்குமார், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் செயலர் உதயகுமார், இயக்குனர் முத்து மீனா ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் மகளிர் தினத்தையொட்டி கவர்னர் தமிழிசைக்கு, முதல்-அமைச்சர் ரங்கசாமி பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

விழாவில் நடைபெற்ற பெண்களின் நாட்டிய நிகழ்ச்சியை அனைவரும் கண்டுகளித்தனர்.

Tags:    

Similar News