காக்காயன்தோப்பில் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணியை முதல்-அமைச்சர் ரங்கசாமி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த காட்சி. அருகில் அமைச்சர் லட்சுமி நாராயணன், பாஸ்கர் எம்.எல்.ஏ. உள்ளனர்.
மக்கள் குறை கேட்ட முதல்-அமைச்சர் ரங்கசாமி
- ரூ.ஒரு கோடியே 59 லட்சம் செலவில் குடிநீர் குழாய் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை காலை நடைபெற்றது.
- முதல்-அமைச்சராக ரங்கசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தனர்
புதுச்சேரி அரசு பொதுப் பணித்துறை நீர்ப்பாசன கோட்டம் அரியாங்குப்பம் தொகுதி காக்காயன் தோப்பில் ரூ.ஒரு கோடியே 59 லட்சம் செலவில் குடிநீர் குழாய் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை காலை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பாஸ்கர் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி னார் சிறப்பு விருந்தினர்களாக முதல்-அமைச்சராக ரங்கசாமி,
அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் பொதுப் பணித்துறை நீர் பாசன பிரிவு அதிகாரிகள், அரியாங் குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள், என்.ஆர். காங்கிரஸ்
பிரமு கர்கள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் குறை கேட்டார்
அப்போது அப்பகுதி மக்களிடம் குறைகளை ரங்க சாமி கேட்டறிந்தார். தங்க ளின் குறைகளை உடனடி யாக பாஸ்கர் எம்.எல்.ஏ. நிறைவேற்றுவார் என உறுதி கூறினார்.
இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி யுடன் அங்கிருந்து கலைந்து சென்றனர்.