புதுச்சேரி

கோப்பு படம்.

முதல்-அமைச்சர் ரங்கசாமி விளக்கம் அளிக்க தேவையில்லை

Published On 2023-10-12 13:51 IST   |   Update On 2023-10-12 13:51:00 IST
  • அமைச்சர் லட்சுமி நாராயணன் அதிரடி பேட்டி
  • அமைச்சர் பதவிகூட கந்தசாமிக்கு வழங்காததால் அவரின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

புதுச்சேரி:

புதுவை பொதுப் பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் இன்று நிருபர்களிடம் கூறிய தாவது:-

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 முன்னாள் முதல்-அமைச்சர்களும் நேற்றைய தினம் என்.ஆர்.காங்கிரஸ் தலித்துகளுக்கு துரோகம் செய்துவிட்டதாக கூறியுள்ளனர்.

புதுவையில் 40 ஆண்டுக்கும் மேலாக காங்கிரஸ்தான் ஆட்சியில் இருந்தது. பெரும்பான்மை சமூகமான வன்னியர்க ளுக்கும், தலித்துகளுக்கும் எத்தனையோ துரோகத்தை அவர்கள் செய்துள்ளனர்.

கந்தசாமிக்கு காங்கிரஸ் தலைவர் பதவியை வழங்காதது ஏன்? அமைச்சர் பதவிகூட கந்தசாமிக்கு வழங்காததால் அவரின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

2015-ம் ஆண்டு பெரும்பான்மை சமூகத்தை கவர வேண்டும் என்ப தற்காக நமச்சிவாயத்திற்கு தலைவர் பதவி கொடுத்தனர்.

ஆனால் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அவருக்கு முதல்-அமைச்சர் பதவி கொடுத்தார்களா? திடீரென எங்கிருந்தோ முளைத்து வந்தவர்தான் முதல்-அமைச்சர் ஆனார். இதெல்லாம் துரோகம் ஆகாதா? இதற்கெல்லாம் காங்கிரசார் பதில் கூறுவார்களா?

என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் எதுவுமே செய்ய வில்லை என தொடர்ந்து ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.

பட்ஜெட்டில் அறிவித்த அறிவிப்புகளை முழுமையாக செயல்படுத்தி வருகிறோம். குடும்ப தலைவிகளுக்கான ரூ.ஆயிரம் உதவித்தொகை ஒவ்வொரு தொகுதியாக வழங்கப்பட்டு வருகிறது.

அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர் மேம்படுத்தப் பட்டு வருகிறது. ஆட்சிக்கு வந்தவுடன் முதியோர் உதவித்தொகை ரூ.500 உயர்த்தப்பட்டது. 26 ஆயிரம் முதியோருக்கு புதிதாக உதவித்தொகை வழங்கி யுள்ளோம்.

கொரோனாவால் இறந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் என கடந்த ஆட்சி யில் அறிவித்த திட்டத்தை நிறைவேற்றியுள்ளோம். அனைத்து சமுதாயத்தினரும் பயன்படும் வகையில் மக்கள் நல்வாழ்வு திட்டங்களை நிறைவேற்றி யுள்ளோம்.

இவற்றையெல்லாம் மறைக்கும்விதமாக தொடர்ந்து இழிவான, மலிவான, சாதி ரீதியான பிரச்சினையை கையில் எடுத்து காங்கிரஸ் அரசியல் செய்கிறது.

கடந்த ஆட்சியில் விஜயவேணி என்ற பெண் எம்.எல்.ஏ. இருந்தார். தற்போதைய காங்கிரஸ் எம்.பி.யின் சொந்த தொகுதி யிலிருந்து வெற்றி பெற்றார். அவருக்கு பரிந்துரை செய்து அமைச்சர் பதவி கேட்டிருக்க வேண்டியதுதானே? அவருக்கு ஏன் அமைச்சர் பதவி வழங்கவில்லை? நீங்கள் நல்லது செய்தி ருந்தால் மக்கள் வாக்களித்தி ருப்பார்கள்.

பிறரை தவறாக பேசுவது நாகரீமல்ல எப்படியிருந்த நான், இப்படி ஆயிட்டேன் என்பது போல 16 எம்.எல்.ஏக்கள் இருந்த கட்சி இப்போது 2 எம்.எல்.ஏக்களாக சுருங்கி யுள்ளது. அதிலும் ஒரு எம்.எல்.ஏ. கடன் வாங்கப்பட்டவர்.

பிறரை தவறாக பேசுவது நாகரீமல்ல. மாநில அந்தஸ்து கேட்பது நாடகம் என விமர்சிக்கின்றனர்.

அகில இந்திய ரீதியில் பல்வேறு பதவிகளில் இருந்த நாராயணசாமி, மாநில அ ந்தஸ்து பெற என்ன செய்தார்? பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு நெருக்கமாக இருந்தபோது புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற நாராயண சாமியும், காங்கிரஸ் கட்சியும் என்ன நடவடிக்கை எடுத்தது? மத்திய அரசு வழக்கமாக ரூ.ஆயிரத்து 750 கோடி நிதி தரும்.

ஆனால் கடந்த 2 ஆண்டாக கூடுதலாக நிதி அளித்து வருகிறது. ஜி.எஸ்.டி. இழப்பீடு பல மாநிலங்களில் நிறுத்தப்பட்ட போதிலும், புதுவைக்கு மட்டும் வேறு வகையில் இழப்பீடு வழங்கியுள்ளனர்.

கடந்த நிதியாண்டில் ரூ.11 ஆயிரம் கோடியில் நிறைவேறிய பட்ஜெட்டில் 93 சதவீதத்தை செல விட்டுள்ளோம். திட்டங்களுக்கு செல விடாமல் வேறு எதற்கு செலவிட முடியும்? அவதூறை ஆதாரமின்றி பரப்பி வருகின்றனர்.

முதல்-அமைச்சராக இருந்தவர்கள் தங்களின் தகுதியை குறைத்துக்கொண்டு பேசுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

முதல்-அமைச்சர் விளக்கம் அளிக்க தேவையில்லை இதைத்தொடர்ந்து அமைச்சர் லட்சுமி நாராயணனிடம், சந்திர பிரியங்கா நீக்கப்பட்டது ஏன்? சாதி, பாலின ரீதியில் துன்புறுத்தப்பட்டதாக புகார் கூறியுள்ளாரே? என பலவாறாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு முதல்- அமைச்சருக்கு ஒரு அமைச்சரை நியமிக்கவும், நீக்கவும் முழு உரிமை உள்ளது. அதற்கான காரணத்தை கூற வேண்டிய அவசியம் இல்லை. சந்திர பிரியங்கா தனிப்பட்ட யார் மீதும் குற்றம் சுமத்தவில்லை.

பொத்தாம்பொதுவாக பாலினதாக்குதலுக்கு உள்ளானதாக கூறியுள்ளார். இதற்கு எப்படி பதிலளிக்க முடியும்? குறிப்பிட்ட ஒருவர் மீது குற்றம்சாட்டி னால் அதற்கு பதிலளிக்க லாம் என தெரிவித்தார்.

தொடர்ந்து நிருபர்கள், அமைச்சர்கள் சம்பாதித்த பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்ய செல்வதாக நாராயணசாமி குற்றம்சாட்டி யுள்ளாரே? என கேட்டபோது, புதுவையின் ஒட்டுமொத்த பட்ஜெட்டே ரூ.11 ஆயிரம் கோடிதான்.

25 ஆண்டுகாலமாக மத்திய அரசின் பல்வேறு பதவிகளில் இருந்த நாராயண சாமி, வெளி நாடுக்கு சென்றதில்லையா? இந்திய பணத்தை பெட்டியில் வைத்து விமான நிலையம் கொண்டுசெல்ல அனுமதிப்பார்களா? அப்படி கொண்டு செல்ல முடியுமா? எனக்கு தெரிந்து தற்போதைய முதல்-அமைச்சர் தவிர அனை வரும் வெளிநாடு சென்றுள்ளனர் என்று கூறினார்.

பேட்டியின்போது அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம், எம்.எல்.ஏக்கள் கே.எஸ்.பி.ரமேஷ், லட்சுமிகாந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News