சந்திர பிரியங்கா ராஜினாமா- துணை நிலை ஆளுநர் விளக்கம்
- சந்திர பிரியங்கா ராஜினாமா செய்ததற்கு சாதி, பாலின தாக்குதலே காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
- புதுச்சேரியில் புதிய அமைச்சர் பதவி ஏற்க இருப்பது தொடர்பாக எனக்கு எந்த தகவலும் வரவில்லை.
புதுவையில் 40 ஆண்டுக்கு பிறகு பெண் எம்.எல்.ஏ. சந்திரபிரியங்கா அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதற்கு சாதி, பாலின தாக்குதலே காரணம் என அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து அரசியல் கட்சியினர் அமைச்சருக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அமைச்சராக இருந்த சந்திர பிரியங்காவின் துறை பணிகளில் தொய்வு இருந்ததால் முதலமைச்சர் அவரை நீக்க கோரினார் என துணை நிலை ஆளுநர் தமிழிசை விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
சந்திர பிரியங்காவிற்கு பிரச்சினைகள் ஏதும் இருந்திருந்தால் என்னை சந்தித்து இருக்கலாம்.
சந்திர பிரியங்கா கூறியுள்ள காரணங்கள் வருத்தம் அளிக்கிறது. சாதி ரீதியான பிரச்சினை எதுவும் கிடையாது.
அமைச்சராக இருந்த சந்திர பிரியங்காவின் துறை பணிகளில் தொய்வு இருந்தால் முதலமைச்சர் அவரை நீக்க கோரினார்.
புதுச்சேரியில் புதிய அமைச்சர் பதவி ஏற்க இருப்பது தொடர்பாக எனக்கு எந்த தகவலும் வரவில்லை.
அமைச்சரவையில் இருந்து தான் நீக்கப்பட உள்ளதை அறிந்த சந்திர பிரியங்கா ராஜினாமா செய்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.