மகளிர் தின விழாவில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
- மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியில் மகளிர் தின விழா புதுமை மற்றும் தொழல்நுட்பம் பாலின சமத்துவம் என்ற தலைப்பில் கொண்டாடப்பட்டது.
- கல்லூரி இயக்குனர் மற்றும் முதல்வருமான வெங்கடாஜலபதி வரவேற்புரையாற்றினார்.
புதுச்சேரி:
மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியில் மகளிர் தின விழா புதுமை மற்றும் தொழல்நுட்பம் பாலின சமத்துவம் என்ற தலைப்பில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு புதுவை கெமின் கன்ட்ரோல் மற்றும் இன்ஸ்டுமென்டேசன் கம்பெனி இணை நிர்வாக இயக்குனர் ராதிகாரகு, சுகாதாரம் மற்றும் குடும்ப நல இயக்குனர், தலைமை பல் அறுவை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கவிபிரியா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சி்றப்புரையாற்றினர்.
நிகழ்ச்சிக்கு மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி இயக்குனர் மற்றும் முதல்வருமான வெங்கடாஜலபதி வரவேற்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் அப்பாஸ் மொய்தீன், ஜெயக்குமார், அன்புமலர், அறிவழகர், வேல்முருகன், கைலாசம், முத்துலெட்சுமி, முகம்மது யாசின் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இதில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் பேராசிரியைகள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் அப்பாஸ் மொய்தீன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை பயோமெடிக்கல் துறைத்தலைவி விஜயலட்சுமி செய்திருந்தார்.