புதுச்சேரி

வேல்ராம்பட்டு ஓய்ஸ்மேன் பள்ளியில் நடந்த உலக மகளிர் தின விழாவில் சிறந்த பெண்மணிகளுக்கு விருதை முன்னாள் அரசு கொறடா அனந்தராமன் வழங்கிய காட்சி.

உலக மகளிர் தின விழா கொண்டாட்டம்

Published On 2023-03-08 13:44 IST   |   Update On 2023-03-08 13:44:00 IST
  • ஓய்ஸ்மேன் பள்ளியில் சிகரம் அமைப்பு சார்பில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
  • மாணவிகளுக்கும், மகளிருக்கும் சிறப்பு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது.

புதுச்சேரி:

வேல்ராம்பட்டு ஓய்ஸ்மேன் பள்ளியில் சிகரம் அமைப்பு சார்பில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு சிகரம் அமைப்பு செயலாளர் லட்சுமி மவுலி தலைமை தாங்கினார். கவிமன்ற தலைவர் கலாவிசு முன்னிலை வகித்தார். தலைவர் சந்திரமவுலி சிறப்புரையாற்றினார்.

முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், சிகரம் தொட்ட மகளிர் விருதை பிரேம பஞ்சகாந்தி சித்ரலோக, கல்பனா ஜெயராமன், ஆனந்தி, எலிசபெத்ராணி, சுபா வைஷ்ணவி, கும்சி, அஸ்வினி, அமலாதேவி ஆகியோருக்கு வழங்கினார். டாக்டர் விஜயகுமாரி வாழ்த்தி பேசினார்.

இதில், மாணவிகளுக்கும், மகளிருக்கும் சிறப்பு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை ஆசிரியர் காயத்ரி தொகுத்து வழங்கினார். புனிதா நன்றி கூறினார்.

விழாவிற்க்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள், மற்றும் சிகரம் அமைப்பினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News