புதுச்சேரி

கர்நாடக சட்ட மேலவை உறுப்பினர்கள் புதுவை கவர்னர் தமிழிசையை சந்தித்து பேசிய காட்சி.

சகோதரத்துவ உணர்வோடு காவிரி நீரை பகிர்ந்து கொள்ள வேண்டும்

Published On 2023-10-07 14:22 IST   |   Update On 2023-10-07 14:22:00 IST
  • கர்நாடக மேலவை குழுவினரிடம் கவர்னர் தமிழிசை வேண்டுகோள்
  • மாநிலத்தின் வளர்ச்சியில் அவர் கொண்டுள்ள அக்கறையை யும் கர்நாடக குழுவினர் பாராட்டினர்.

புதுச்சேரி:

புதுவைக்கு அரசு முறை பயணமாக கர்நாடக சட்டப்பேரவை துணைத் தலைவர் எம்.கே.பிரானேஷ் தலைமையிலான சட்ட மேலவை உறுப்பினர்கள் 6 பேர், 4 அதிகாரிகள் கொண்ட குழுவினர் வந்த னர்.

இந்த குழுவினர் கவர்னர் மாளிகையில் கவர்னர் தமிழிசையை இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர்.

அப்போது, இந்தியாவில் அனைவரும் சகோதரத்து வத்தோடு வாழ்ந்து வருகி றோம். காவேரி நதிநீர்ப் பகிர்வு பிரச்சினையிலும் சகோதரத்துவ உணர்வோடு பொறுப்புடன் செயல்பட்டு காவிரி நீரைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என கவர்னர் தமிழிசை வலியுறுத்தினார்.

தமிழ் இலக்கியங்களில் காவிரி நதி கரைபுரண்டு ஓடும் அழகும் மீன்கள் துள்ளி விளையாடும் அழகும் சொல்லப்பட்டி ருப்பதாகவும், காவிரி நதிநீர் பாசனத்தின் மூலம் யானை கட்டி போரடிக்கும் அளவிற்கு தஞ்சாவூர் தமிழகத்தின் நெற்களஞ்சி யமாக சிறப்புடன் விளங்கி யதையும் எடுத்துக் கூறினார்.

இதன்பின் அந்த குழுவினர் சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்தனர்.

அப்போது, சட்டப் பேரவையில் உள்ள நிலைக்குழுக்கள், அவற்றின் அதிகாரங்கள், அவை செயல்படும் விதங்கள் குறித்தும் புதுவையில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்தனர்.

மக்கள் நலத்திட்டங்களை விரைந்து செயல்படுத்து வதில் முதல்-அமைச்சர் ரங்கசாமி காட்டும் முனைப்பையும், மாநிலத்தின் வளர்ச்சியில் அவர் கொண்டுள்ள அக்கறையை யும் கர்நாடக குழுவினர் பாராட்டினர்.

கர்நாடக மேலவை உறுப்பினர்கள் புதுவை சட்டசபையை சுற்றிப் பார்த்தனர்.

இந்த சந்திப்பின்போது சபாநாயகர் ஏம்பலம் செல்வம் உடனிருந்தார்.

Tags:    

Similar News