புதுச்சேரி

கோப்பு படம்.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது வழக்கு-மார்க்சிஸ்ட்டு கண்டனம்

Update: 2023-02-04 06:24 GMT
  • புதுவை பிரதேச மார்க்சிஸ்ட்டு செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
  • அப்போது ரேசன் கடைகளை திறப்பதற்கான கோப்பு அரசுக்கு அனுப்பட்டுள்ளது என்றும், இன்னும் சில வாரங்களில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதி யளித்தார்.

புதுச்சேரி:

புதுவை பிரதேச மார்க்சிஸ்ட்டு செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ரேஷன்கடைகளை திறக்கக்கோரி அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பில் தட்டாஞ்சாவடி குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அலுவலகத்தை முற்றுகை யிட்டு நியாயமான போராட்ட த்தில் ஈடுபட்டனர். துறை இயக்குனர் சக்திவேல் சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது ரேசன் கடைகளை திறப்பதற்கான கோப்பு அரசுக்கு அனுப்பட்டுள்ளது என்றும், இன்னும் சில வாரங்களில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதி யளித்தார். அதிகாரியின் கோரிக்கையை ஏற்று போராட்டம் கைவிட ப்பட்டது.

போராட்டத்தை எப்படியாவது சீர்குலைக்க வேண்டும் என காவல்துறை யினர் பல்வேறு தடைகளை ஏற்படுத்தினர். பெண்கள் போராட்டத்தில் ஈடுபட மத்திய, மாநில அரசுகளே காரணம். இந்நிலையில் போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் கூட்டமைப்பினர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளதை மார்க்சிஸ்ட் வன்மையாக கண்டிக்கிறது. பெண்கள் போராட்டத்தில் பங்கேற்றால் வழக்குப்பதிவு செய்து அவர்களின் போராட்ட உணர்வை முடக்க நினைப்பது ஒருபோதும் வெற்றி அடை யாது என்பதை அரசு உணரவேண்டும்.

பெண்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை ரத்து செய்துவிட்டு ரேஷன் கடைகளை உடனே திறக்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News